வெகுநேரம் குளிப்பவரா நீங்கள்? அதனால் இந்த பிரச்சினை ஏற்படுமாம் உஷார்!!

931

வெகுநேரம் குளிப்பவரா நீங்கள்..?

தண்ணீர் இருக்கிறது என்பதால் சிலர் நீண்ட நேரம் குளிப்பார்கள். ஆனால் இது போல குளிக்கக்கூடாது.

எத்தனை நிமிடம் குளிக்கலாம்?

வீட்டில் குளிப்பவர்கள் பத்து நிமிடங்கள் குளித்தால்போதும்.

அருவி போல் மேலிருந்து கீழ்நோக்கி விழும் நீரில் சற்று அதிக நேரம் குளிக்கலாம். ஆறு போல் ஓடும் நீரிலும் சற்று அதிக நேரம் குளிக்கலாம்.

நீண்ட நேரம் குளிக்கும்போது சருமத்தில் உள்ள இயற்கை ஈரப்பதம் குறைய தொடங்கிவிடும்.

வெந்நீரில் குளிக்க பலரும் விரும்புகிறார்கள். மாலை நேரத்தில் களைப்புடன் வீடு திரும்பும்போது வெந்நீரில் குளித்தால் உடல் அலுப்பு நீங்கிவிடும் என்று நினைப்பார்கள்.

அதையே வழக்கமாக்கிக்கொள்ளக்கூடாது. ஏனெனில் சருமத்தில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகளுக்கு வெந்நீர் கேடு விளைவித்துவிடும்.

குளித்து முடித்தவுடன் தலையை, தண்ணீர்த்தன்மை இல்லாத டவல் மூலம் நன்றாக துவட்டவேண்டும். அதுபோல் உடலில் படிந்திருக்கும் நீர்த்திவலைகளையும் நன்றாக துடைத்தெடுக்கவேண்டும்.

இல்லாவிட்டால் அதுவும் சரும பாதிப்புக்கு காரணமாகிவிடும்.

அடிக்கடி உடலுக்கு மட்டும் குளிப்பது பொடுகு தொல்லையை உருவாக்கும். தொடர்ந்து உடலுக்கு குளித்தால் முடி கொட்டுதல், தலைவலி போன்ற பி.ர.ச்.சினைகள் தோன்றக்கூடும்.