நடிகர் சூரி…
பொதுவாகவே காமெடி நடிகர்களுக்கென்று தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு இடம் உண்டு.
கவுண்டமணி செந்தில் தொடங்கி யோகி பாபு வரை பல ஜாம்பவான் காமெடியன்கள் இருந்தாலும், நடிகர் சூரியின் காமெடி தமிழ் சினிமா ரசிகர்களை மற்ற காமெடி நடிகர்கள் அளவுக்கு வெகுவாக கவரவில்லை.
வெற்றிமாறன் இயக்கத்தில், ஹீரோவாக நடிக்க இருப்பதால் அவர் காமெடியனாக இனி நடிப்பதை நிறுத்தி உள்ளதாக செய்திகள் பரவ, உடனடியாக அதெல்லாம் இல்லை நான் எப்போதும் காமெடியன் தான் மக்கா என்று விளக்கம் அளித்தார்.
பிறகு அவரை தேடி அண்ணாத்த படம் வந்தது அதை லாவகமாக பிடித்துக்கொண்டார்.
இந்நிலையில், கலைப்புலி எஸ். தானு தயாரிப்பில் சூர்யாவுடன் வாடிவாசல் மற்றும் சூரியுடன் ஒரு படம் என கமிட் ஆகி இருக்கிறார் வெற்றிமாறன்.
சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கும் படத்திற்காக சூரி தாடி, மீசை என செம்ம மாஸ் கெட்டப் ஒன்றில் இருந்து வந்தார். அந்த புகைப்படம் கூட இணையத்தில் மிகவும் வைரலானது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கவிருக்கும் படத்திற்காக மீண்டும் சிக்ஸ் பேக் வைத்து தனது உடலை மிகவும் ஃபிட்டாக மாற்றியுள்ளார் சூரி.
I would like to thank @vasanthsarwan My personal coach for the constant support and motivation ! என் உடலை உறுதி செய்த மாஸ்டர் சரவணனுக்கு நன்றி…??️♂️? pic.twitter.com/L60BzsDDeH
— Actor Soori (@sooriofficial) September 19, 2020