இளம் பேராசிரியை மீது..

தமிழகத்தில் இளம் பேராசிரியை மீது ஆசைப்பட்டு அவரை க டத்தி சென்ற வழக்கில் முக்கிய குற்றவாளியின் இரண்டு வெளிநாட்டு நண்பர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

திருச்சியை சேர்ந்தவர் வணக்கம் சோமு (40). இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். சோமு மலைக்கோட்டை பகுதி அதிமுக பொருளாளராகவும் உள்ளார்.

இந்நிலையில் கல்லூரியில் பேராசிரியையாக உள்ள இளம் பெண் மீது காதல் கொண்ட சோமுவுக்கு அவரை மணக்க ஆசை ஏற்பட்டது. ஆனால் அந்த பெண் சோமுவின் விருப்பத்துக்கு சம்மதிக்கவில்லை.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அப்பெண்ணை சோமு ஆம்புலன்ஸ் மூலம் தனது நண்பர்கள் உதவியுடன் க டத்தினார். பின்னர் அவரை அங்குள்ள ஒரு பகுதியில் இறக்கிவிட்டு தப்பிவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சோமுவுக்கு உதவிய இரண்டு வெளிநாட்டு நண்பர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் பெயர் அலெக்ஸ் (36). சிங்கப்பூரில் பணிபுரிகிறார். இன்னொருவர் பெயர் மரியபிரகாஷ் (36) மலேசியாவில் வேலை செய்து வந்தார்.

இவர்கள் இருவரும் சோமுவுடன் ஆம்புலன்ஸில் இருந்த நிலையில் இவ்வழக்கில் சிக்கி கொள்வோம் என பயந்து வெளிநாட்டுக்கு தப்பவிருந்த போது விமான நிலையத்தில் இருவரையும் பொலிசார் கைது செய்தனர்.

அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், நாங்கள் இருவரும் சோமுவின் கல்லூரி நண்பர்கள். எங்களுடன் பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்ட சோமு பேராசியையை திருமணம் செய்ய போவதாகவும் அதற்கு உதவ வேண்டும் என கூறி ஊருக்கு வர சொன்னான்.

அவன் தான் எங்களுக்கு விமான டிக்கெட் எடுத்து கொடுத்தான். அதன்படி ஊருக்கு வந்த நாங்கள் சம்பவத்தன்று பேராசிரியையை ஆம்புலன்சில் வ லுக்கட்டாயமாக ஏற்றினோம். அப்போது ஆம்புலன்ஸில் சோமு அவர் கழுத்தில் தாலி கட்ட முயன்ற போது எங்களை பார்த்து பேசிய பேராசிரியை, ஆம்பிளையா இருந்தா சோமுவை என் முகத்தை பார்த்து பேச சொல்லுங்கள் என கூறினார்.

இதையடுத்து பயந்து போன நாங்கள், சோமுவிடம் ஏன் இப்படியெல்லாம் செய்கிறாய் என கேட்டோம். அப்போது பொலிசார் எங்களை துரத்தியதால் பேராசிரியையை கீழே இறக்கிவிட்டோம் என கூறியுள்ளனர். இதனிடையில் தலைமறைவாக உள்ள சோமு உள்ளிட்ட நால்வரை பொலிசார் தேடி வருகிறார்கள்.