வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய கோடீஸ்வரருக்கு நேர்ந்த பயங்கரம்!!

555

கோடீஸ்வரருக்கு நேர்ந்த பயங்கரம்

அமெரிக்காவிலிருந்து சொந்த ஊரான ஆந்திராவுக்கு திரும்பிய கோடீஸ்வரர் ரத்த வெள்ளத்தில் சாலையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவை சேர்ந்தவர் ஜெயராம் சிக்ருபதி. இவர் அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு தலைவராக இருந்தார். இந்நிலையில் ஒரு மாதத்துக்கு முன்னர் தொழில் விடயமாக இந்தியாவுக்கு வந்த ஜெயராம் சொந்த ஊரான விஜயவாடாவுக்கு வந்தார்.

விஜயவாடா நெடுஞ்சாலையில் ஜெயராமின் கார் அனாதையாக நேற்று நின்றிருந்தது. அங்கிருந்தவர்கள் அருகில் சென்று பார்த்த போது காரின் பின் சீட்டில் ஜெயராம் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றினார்கள். கார் உள்ளே இருந்த மது பாட்டில்களையும் கைப்பற்றினார்கள். ஜெயராம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதும் பொலிசார் அந்த கோணத்தில் விசாரித்து வருகிறார்கள்.

பொலிசார் கூறுகையில், ஜெயராம் தற்போது ஹைதராபத்தில் உள்ள நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார். கடந்தாண்டு ஜனவரி மாதம் தன்னுடைய நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் தராத வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.

இதோடு அவர் மீது சில மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
ஜெயராம் இறந்தது குறித்து அவர் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தகவல் கொடுத்துள்ளோம். அவருக்கு தனிப்பட்ட மற்றும் தொழில் முறையில் விரோதிகள் இருக்கிறார்களா என விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.