மாரிமுத்து
சமூக வலைதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் மீடூ விவகாரத்தையும் வைரமுத்துவுக்கு எதிரான சின்மயி புகாரையும் கடுமையாக விமர்சித்தார் மாரிமுத்து.
வைரமுத்து ஒரு ஆண் என்பதால் பெண்ணை தனது அறைக்கு அழைத்துள்ளார், அவர் ஒரு பெண்ணை அழைத்ததில் என்ன தவறு இருக்கிறது. ஒரு ஆண் நபரை தனது அறைக்கு அழைத்தால் தான் தவறு என கூறினார். விருப்பமுள்ள பெண்கள் செல்லலாம், விருப்பமில்லாதவர்கள் ஊடகங்களில் பேட்டி கொடுக்கலாம் என சர்ச்சையாக பேசியிருந்தார்.
இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து அவரது செல்போனில் கண்டன குரல்களை பெண்ணியவாதிகள் எழுப்பியுள்ளனர். மேலும் வைரமுத்து மீது உள்ள பாசத்தால், கோபத்தில் உணர்ச்சி வசப்பட்டு பேசிவிட்டதாக தெரிவித்த அவர் அந்த கருத்துக்காக மன்னிப்பு கேட்க போவதில்லை என்றும் திட்டவட்டமாக கூறினார்.
மாரிமுத்துவின் கருத்துக்கு நடிகர் சித்தார்த் உள்ளிட்ட பலரும் டிவிட்டரில் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர்.