ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் கிக்கான போஸ் கொடுத்த துஷாரா விஜயன்!!

120

துஷாரா விஜயன்..

துஷாரா விஜயன் தமிழ் மொழி படங்களில் தோன்றிய ஓர் இந்திய நடிகை ஆவார். போதை ஏறி புத்தி மாறி என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான பிறகு சார்பட்டா பரம்பரை (2021) அன்புள்ள கில்லி (2022) உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது தந்தை திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். சாணார்பட்டி கன்னியாபுரத்தில் தொடக்க கல்வி கற்று பின்னர் கோவை சென்று துசாரா பொறியியல் படித்தார்.

ஒரு கட்டத்தில் பொறியியல் படிப்பை விட்டுவிட்டு ஆடை வடிவமைப்பியல் படித்து வடிவழகு மாதிரி, குறும்படங்கள் என புதிய பாதையில் பயணித்தார். 2019 ஆம் ஆண்டு ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். 2021 ஆம் ஆண்டு சார்பட்டா பரம்பரையின் நாயகியாகி நடிப்பில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

2022 ஆம் ஆண்டில் நாயை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள அன்புள்ள கில்லி படத்தில் நடித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு வெளியான குத்துசண்டை விளையாட்டை மையமாகக் கொண்ட சார்பட்டா பரம்பரை திரைப்படம் துசாராவிற்கு திருப்பு முனையாக அமைந்தது. 1970 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த சென்னைப் பெண்ணாக இவர் திரைப்படத்தில் தோன்றினார்.

இயக்குநர் பா.ரஞ்சித் சமூக வலைத்தளத்தில் இவரின் புகைப்படத்தை பார்த்து இருபது நிமிட நேர்காணலுக்கு பின்னர் தேர்வு செய்தார்.இந்த படத்துக்காக, துசாரா வட சென்னை பேச்சுவழக்கைக் கற்றுக்கொண்டார். குறிப்பிட்ட நடத்தை முறைகளில் பயிற்சி பெற்றார். துசாராவின் நடிப்பு பாராட்டைப் பெற்று, நேர்மறையான விமர்சனங்களும் கிடைத்துள்ளன.

அதன் பின்னர் பா ரஞ்சித் தயாரித்து இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது படத்தில் அவர் ஏற்று நடித்த ரெனே கதாபாத்திரம் பரவலாக பாராட்டுகளைப் பெற்றது. இப்போது அவர் அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் வெளியிடும் போட்டோஷூட்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.