ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்கவிருக்கும் நடிகை இவரா? வெளியான தகவல்!!

673

மறைந்த நடிகை ஸ்ரீதேவி நடித்த ‘சால்பாஸ்’ திரைப்படத்தின் Remake-யில், அவரது வேடத்தில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனிகபூர், தன் மனைவி நடித்த சூப்பர் ஹிட் படங்களை Remake செய்யும் திட்டத்தில் உள்ளார்.

அதன் முதற்கட்டமாக, ஸ்ரீதேவி இரட்டை வேடத்தில் நடித்து சூப்பர் ஹிட்டடித்த ‘சால்பாஸ்’ திரைப்படம் போனிகபூரின் தயாரிப்பில் Remake ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் ஸ்ரீதேவியின் வேடத்தில் நடிக்க, பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே அணுகப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்தப் படத்தை ஃபாராகான் இயக்கவிருக்கிறார்.

இதில் தீபிகா படுகோனே நடித்தால், ஒரே இயக்குநரின் மூன்று படங்களில் நடித்த நாயகி என்ற பெருமையை அவர் பெறுவார். ஏற்கனவே, ஃபாராகானின் இயக்கத்தில் ‘ஓம் சாந்தி ஓம்’, ‘ஹேப்பி நியூ இயர்’ ஆகிய படங்களில் தீபிகா நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.