ஸ்ரீரெட்டியின் பரபரப்பு புகாருக்கு சுந்தர் சி-யின் ஆவேசமான பதிலடி

583

தன் மீது கூறப்பட்டுள்ள பாலியல் புகார் தவறானது என்றும், இது தொடர்பாக உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.

நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாக தெலுங்கு திரைப்பட பிரபலங்கள் மீது புகார் கூறியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தற்போது தமிழ் சினிமா பக்கம் திசை திரும்பி சூறாவளியாக வீசி வருகிறது.

நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சந்தீப் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளை கூறிய ஸ்ரீ ரெட்டி. தற்போது இயக்குனர் சுந்தர்.சி பற்றி திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டார் ஆனால் அதற்கு சுந்தர் சி முற்றிலுமாக மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் கூறியதாவது, ” அவர் (ஸ்ரீ ரெட்டி) கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். விரைவில் வழக்கு தொடர்வோம்” என சுந்தர்.சி தெரிவித்தார்