ஹரியானாவில் சிறுமியைக் கொன்று கால்வாயில் வீசிய அதிர்ச்சி சம்பவம்!!

1156

ஹரியானா மாநிலம் சமரகோபால்பூரில் 7 வயது சிறுமியின் சடலம் ஒன்று கால்வாயில் கிடந்துள்ளது.காஷ்மீர் ஆஷிபா மற்றும் சூரத் நகரில் 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட அதிர்வு அடங்குமுன் மேலும் ஒரு சிறுமியைக் கொன்று கால்வாயில் வீசியுள்ளனர்.

மிக சிதைந்த நிலையில் இருக்கும் அச்சிறுமியின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சிறுமி பற்றிய விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.பரிசோதனை விவரம் தெரிய வந்த பின்னர்தான் அச்சிறுமி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டாரா எனத் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

தொடரும் குழந்தைகள் மீதான பலாத்காரங்கள் நாட்டை உலுக்கியுள்ளன.மேலும் 12 வயதுக்கு உட்பட்ட குழைந்தைகளை வன்புணர்வு செய்து கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் சட்ட மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் தொடரும் சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.