இந்திய மாநிலம்..

மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி கைலாஷ் படாங்கே(22). தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்த இவர், கடந்த வியாழக்கிழமை வங்கி கிளை ஒன்றில் கடன் கேட்டுள்ளார்.

அவர் கடன் கேட்டதற்கான காரணத்தை அறிந்த வங்கி ஊழியர்கள் அதிர்ந்து போயினர். அவரது விண்ணப்பத்தில் ஹெலிகாப்டர் வாங்க கடன் வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, இரண்டு ஆண்டுகளாக சோயாபீன்ஸ் பயிரிட்டு வந்தேன். ஆனால் மழை பொய்த்து போனதால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. எனவே ஹெலிகாப்டர் வாங்கி வாடகைக்கு விட்டு, அதன்மூலம் வருமானம் பார்க்க முடிவு செய்துள்ளேன். ஆகவே வங்கியில் 6.65 கோடி ரூபாய் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளேன்.

ஏனென்றால் மற்ற தொழில்களில் போட்டி உள்ளது. எனவேதான் இந்த ஹெலிகாப்டர் வாடகை விடும் தொழிலை முடிவு செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார். மேலும், பணக்காரர்கள் தான் பெரிய கனவுகளை கனவு காண வேண்டுமா? விவசாயிகளும் பெரிய கனவுகளை காணலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.