அஜித்தின் சமீபத்திய படங்கள் எனக்கு பிடிக்கவில்லை: பிரபல சீரியல் நாயகி ஓபன் டாக்!!

1449

தமிழ் சினிமாவில் முழு ஸ்ட்ரைக் நடப்பதால் பிரபலங்களை தாண்டி ரசிகர்களும் படு சோகத்தில் உள்ளனர். வாரம் வாரம் நிறைய படங்களை திரைக்கு போய் பார்க்கும் ரசிகர்களுக்கு இப்போது கடும் கஷ்டமாக இருக்கிறது என்றே கூறலாம்.

இந்த நிலையில் தெய்வமகள் சீரியல் பிரபலம் சிந்து ஸ்யாம் தன் சினிமா பயணம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் அஜித்தை பற்றி பேசும்போது, மிகவும் அழகான, ஸ்மாட்டான, மாஸான நடிகர். ஆனால் அவரது சமீபத்திய படங்கள் எதுவும் எனக்கு நிஜமாக பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

விஜய்யை பற்றி பேசும்போது, என் மகன் இவரை அண்ணா என்று தான் கூறுவான். அவர் நடனம் பார்க்கும் போது கடினமான நடன அமைப்பு கூட சாதாரணமாக இருக்கும். சூப்பர் ஸ்டாரிடம் இருக்கும் ஒரு விஷயம் போல இவரிடமும் ஏதோ ஒன்று இருக்கிறது என்று தான் நம்புவதாக பேசியுள்ளார்.