கவின்……..
பிரபல சீரியல் நடிகரான கவின். பிக்பாஸ் நிகழ்ச்சிற்கு பிறகு இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது.
இதையடுத்து, இவர் தற்போது லிப்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் கவின். இப்படம் இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரும் என தெரிகிறது.
இந்நிலையில், சோஷியல் மீடியாவில் எப்பொழுதும் புகைப்படத்தை பதிவிட்டு வரும் கவின் தற்போது தனது கெட்டப்பை முழுமையாக மாற்றியுள்ளார்.
அந்த புகைப்படத்தில், புதிய தோற்றத்தையும் பழைய தோற்றத்தையும் இன்ஸ்டாகிராம் பத்தில் பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட அவரின் ரசிகர்கள் கவினா இது? என வியப்பில் லைக்குகளை குவிக்கின்றனர்.