ஐஸ்வர்யா ராய்
பாலிவுட் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருகிறார்கள் அபிஷேக் -ஐஸ்வர்யா ராய் ஜோடி. இவர்களுக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஐஸ்வர்யாவின் மீது காதலில் விழுந்த தருணம் குறித்து அபிஷேக் கூறியதாவது, என் தொடக்க காலத்தில் ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து நடித்தேன்.
அப்போது ஒருவருக்கொருவர் நன்றாக பேசிக்கொள்வோம். அதனால் ஒருவரைபற்றி இன்னொருவர் நன்றாக தெரிந்து கொண்டோம். எனவே எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது. அது நாளடைவில் தொடரவும் செய்தது. பின்னர் நட்பும் நாளுக்கு நாள் அதிக அன்பாகி நெருக்கமான நண்பர்கள் ஆனோம்.
பின்னர் ‘உம்ரோ ஜான்’ திரைப்படத்தில் இருவரும் ஒன்றாக நடித்தபோது எனக்கு காதல் இருப்பதாக தோன்றியது. அதன்பின் என் காதலை அவரிடம் தெரிவித்தேன். அவரும் ஏற்றுக்கொண்டார்.
காதல் திருமணத்தில் முடிந்து இப்போது எங்கள் வாழ்க்கை சிறப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. எங்கள் அன்பின் வெளிப்பாட்டில் அழகிய ஆராத்யா எங்களுக்கு மகளாக உள்ளார்.
எந்த ஒரு வேலையையும் பொறுப்பாக செய்யக்கூடியவர் ஐஸ்வர்யா. இந்த வாழ்க்கை இனிமையாக இருக்கிறது என கூறியுள்ளார்.