அந்த நடிகரால் தான் நான் இன்னும் திருமணம் செய்யவில்லை, அதிர்ச்சியை ஏற்படுத்திய தபு!!

582

தபு பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தமிழில் சிறைச்சாலை, காதல் தேசம், கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் ஆகிய் படங்களில் நடித்தவர்.

இவர் 40 வயது கடந்தும் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை, இதுக்குறித்து அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார்.இதில் ‘நடிகர் அஜய் தேவ்கன் என்னுடைய நெருங்கிய நண்பர், அவர் என்னுடன் 20 வருடங்களுக்கு மேலாக பழகி வருகின்றார்.

என்னுடன் இருந்த தருணங்களை அவர் உணர்வார். அவரால்தான் நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன். அதனால் எனக்கு வருத்தம் இல்லை’ என்று அவர் கூறியுள்ளார்.

தபு இப்படி பேசியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் அஜய் தேவ்கன் நடிகை கஜோலை திருமணம் செய்துக்கொண்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு தபு இப்படி ஒரு பேட்டிக்கொடுப்பது பலருக்கும் அதிர்ச்சி தான், அவர் என்ன சொல்ல முயற்சிக்கின்றார் என்றும் யாருக்கும் புரியவில்லை.