சின்மயி
வைரமுத்துவுக்கும் சின்மயிக்கும் முதன் முதலாக மோதல் வந்தது சென்னை உயர்நீதிமன்ற 150வது ஆண்டு விழா நிகழ்ச்சியின் போதுதான் என அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த மகராஜன் என்பவர் கூறியுள்ளார்.
இசைக் கச்சேரிகள் நடத்தும் கம்பெனியை நடத்தி வருகிறார் மகராஜன். இந்நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிக்கு பேட்டியளித்த சின்மயி அம்மா, வைரமுத்து சார்பாக மகராஜன் பேசுவார். அவர் கன்வின்ஸ் பண்றதுல கில்லாடி என்று கூயிருந்தார்.
இந்நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பார்த்துக்கிட்டு இருக்கிற டிவியில சொல்லியிருக்கார், சின்மயி அம்மா. தப்பான அர்த்தம் தர்ற அந்த வார்த்தைக்காகவே சின்மயி மீதும், அவர் அம்மா மீதும் வழக்கு தொடர முடிவு செய்திருக்கேன் என மகராஜன் கூறியுள்ளார்.
2008-ல்தான் கம்பெனியைத் தொடங்கி இந்த ஃபீல்டுக்குள்ளேயே வர்றேன். ஆனா 2004- ம் வருடம் சுவிட்சர்லாந்துல நடந்த விவகாரத்துல என் பெயரை இழுத்து விடுறாங்க. அந்தச் சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பே இல்லை. எங்க கம்பெனி, இதுவரை ஒரு ஷோவுக்குக்கூட சின்மயியைக் கூப்பிட்டதே இல்லை. காரணம், அவர் பிரச்சனைகள் செய்வார்.
தொலைக்காட்சியில் என் பெயரைச் சொன்ன நாள்ல இருந்து எனக்குத் தூக்கமே இல்லை. இப்போவரைக்கும் என் குடும்பத்துல எல்லோருக்குமே மன உளைச்சல். இதுக்கு சின்மயி, அவங்க அம்மா ரெண்டுபேருமே பதில் சொல்லணும்.
அவங்க பேசின ஆதாரங்களைத் திரட்டி வழக்கறிஞர்கிட்ட பேசியிருக்கேன். ஒண்ணு, இப்படிப் பேசுனதுக்கு அவங்க மன்னிப்புக் கேட்கணும். இல்லையா, அவங்கமேல அவதூறு வழக்கு தொடுக்கப்போறேன், நீதிமன்றத்துல வந்து பதில் சொல்லட்டும் என கூறியுள்ளார்.