அப்பாவுடன் சேர வேண்டும் ஆசையில் போஷிகா! மறுக்கும் நித்யா! 

898

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல விமர்சனங்களை பெற்று வருகிற போதிலும் மக்கள் மத்தியில் அதன் மதிப்பு குறையவில்லை என்று தான் கூற வேண்டும்.

தினம் தினம், சுவாரஷ்யத்திற்கு குறையில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியில், கடந்த வாரம் நித்யா வெளியேறினார்.இந்நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளிவந்த நித்யா அங்கு பெற்ற அனுபவங்கள் குறித்து பல சேனல்களுக்கு இண்டெர்வியு கொடுத்துள்ளார்.

அதில், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பல உண்மைகள் வெளிவந்தன.இது ஒருபுறமிருக்க, பிக்பாஸ் நிகழ்ச்சியில், பாலாஜியுடன் சேர்ந்து வாழ்வது குறித்து பாசிட்டிவ் ஆக கமலிடம் பேசிய நித்யா தற்போது அது குறித்து சிறிதும் விருப்பமில்லை என்று கூறுவதாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் விஜய் டிவிக்கு இண்டெர்வியு கொடுத்துள்ளார்.அதில், பாலாஜி- நித்யா மகள் போஷிகா தனது தந்தை பாலாஜியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆசைபடுவதாக கூறும் வேளையில், நித்யா சிறிதும் விருப்பமில்லை எனக் கூறியுள்ளார்.