மெலானியா……………
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்றுள்ள டிரம்பை அவர் மனைவி மெலானியா விவாகரத்து செய்ய முடிவெடுத்து விட்டதாக முன்னாள் உதவியாளர்கள் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் 290 இடங்களில் வெற்றி பெற்று புதிய அதிபராக தேர்வாகியுள்ளார்.
இந்த நிலையில் தேர்தலில் தோற்ற டொனால்டு டிரம்ப்பை அவர் மனைவி மெலானியா விவாகரத்து செய்யவுள்ளார் என முன்னாள் உதவியாளர்கள் கூறியுள்ளனர்.
டிரம்பின் மூன்றாவது மனைவி மெலானியா ஆவார். இருவருக்கும் 25 வயது வித்தியாசம் உள்ளது.
முன்னாள் உதவியாளர் Stephanie Wolkoff கூறுகையில், டிரம்ப் – மெலானியாவின் மகன் போரனுக்கு சொத்தில் சமமான பங்கை வழங்க மெலனியா திருமணத்திற்கு பிந்தைய ஒப்பந்தத்தில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார் என கூறியுள்ளார்.
மற்றொரு உதவியாளர் Omarosa Manigault Newman கூறுகையில், தம்பதியின் 15 ஆண்டுகால திருமண பந்தம் முடிந்துவிட்டது, அவர் பதவியில் இருந்து வெளியேறினால் தான் விவாகரத்து தொடர்பிலான செயலை செய்ய முடியும் என்ற நிலையில் அந்த நிமிடங்களுக்காக மெலானியா காத்திருக்கிறார்.
டிரம்ப் பதவியில் இருக்கும் போது மெலானியா இதற்கு முயற்சித்தால், அவரை தண்டிக்க டிரம்ப் வழியை கண்டுபிடிப்பார் என அவர் கருதுகிறார் என கூறியுள்ளார். ஆனாலும் இது தொடர்பில் அதிகாரபூர்வ தகவல் வந்தால் மட்டுமே அது நம்பகத்தன்மையை கொடுக்கும்.