அம்பிகாவின் ஆசை வார்த்தையில் மயங்கிய மடாதிபதி : 15 பேர் இறந்த சம்பவத்தில் அதிர்ச்சித் தகவல்கள்!!

893

அம்பிகாவின் ஆசை வார்த்தையில் மயங்கிய மடாதிபதி

இந்தியாவில் கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்து 15 பேர் இறந்த சம்பவத்தில், பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் சுலவாடி கிராமத்தில் உள்ள மாரம்மா கோயிலில் பிரசாதம் சாப்பிட்டதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 100 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் 26 பேர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சாம்ராஜ் நகர் எஸ்.பி.தர்மேந்திர குமார் மீனா விசாரணை நடத்தி வந்தார். அதில் பல திடுக்கிடும் தகவல்கல் வெளியாகியுள்ளது,

அதில், சுலவாடி மாரம்மா கோவிலின் அறக்கட்டளைத் தலைவராக சாளூர் மடத்தின் இளைய மடாதிபதி மகாதேவசாமி இருந்துள்ளார். அறக்கட்டளை நிர்வாகியாக சின்னப்பி என்பவரும் அவரின் ஆதரவாளர்களும் இருந்துள்ளனர். சாளூர் மடத்தில் பெரிய மடாதிபதி குருசாமிக்கும் இளைய மடாதிபதிக்கும் இடையே ஏற்கனவே மோதல் இருந்து வந்துள்ளது.

இதற்கிடையில் இளைய மடாதிபதிக்கும் மாரம்மா கோயில் நிர்வாகிகளுள் ஒருவரான மாதேஷ் என்பவரின் மனைவி அம்பிகாவுக்கும் தொடர்பு இருந்துள்ளது.

இதனால் இளையமடாதிபதி கோவில் நிர்வாகத்தை அம்பிகாவிடம் கொடுப்பதற்கு இளையமடாதிபதி திட்டமிட்டுள்ளார். அதுமட்டுமின்றி சாளூர் மடத்துக்கும் பெரிய மடாதிபதிக்கும் அவப் பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் அவரிடம் இருந்துள்ளது.

மாரம்மா கோயில் நிர்வாகம் முழுவதையும் சின்னப்பி என்பவர் பார்த்து வந்துள்ளார். காதலி அம்பிகாவின் கணவர் மாதேஷை இளையமடாதிபதி நியமித்துள்ளார். அதன் பின் அம்பிகாவை கோவில் மேற்பார்வையாளராகவும் நியமித்துள்ளார். இதைத் தொடர்ந்து காதலி அம்பிகா இளையமடாதிபதியிடம் சின்னப்பியை கோவில் நிர்வாகத்தில் இருந்து முற்றிலும் நீக்கினாம் மட்டுமே நீங்கள் சொல்லும் படி கேட்பேன் என்று ஆசைகாட்டியுள்ளார்.

அதன் பின்னரே கடந்த 14-ஆம் திகதி நடந்த விழாவின் போது அம்பிகா, மாதேஷ், தொட்டையா ஆகியோர் கோவிலுக்கு விஷப்பாட்டிலுடன் வந்து உணவில் விஷத்தை கலந்துள்ளனர். இப்படி 15 பாட்டில் விஷம் கலந்துள்ளனர்.

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் இந்தக் கோவில் இளையமடாதிபதியின் கட்டுப்பாட்டில் தான் இருந்துள்ளது. கோவில் கோபுரம் கட்டுவதற்காக நன்கொடை கோடிக்கணக்கில் குவிந்துள்ளது.

இதன் காரணமாக கோவில் நிர்வாகத்தை முழுமையாக தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்றுள்ளார். ஆனால் அவரின் நடவடிக்கை முற்றிலும் பிடிக்காத காரணத்தினால், கிராம மக்கள் அறைக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து சுமார் 1.5 கோடிக்கும் கோவில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. வரவு, செலவுகளை சின்னப்பி கவனித்து வந்துள்ளார்.இந்த திறப்பு விழாவின் போது தான் விஷத்தை கலந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் மற்றொரு கூட்டாளியாக இருக்கும் தொட்டையா என்பவர் மாரம்மா கோவில் நாகசிலைகள் வைத்து பூஜை செய்து பணம் வசூலித்து வந்துள்ளார். ஆனால் அவரின் உண்மை முகத்தை அறிந்த சின்னப்பில் கோவிலை விட்டு விரட்டியுள்ளார். இதற்காக அவர் சின்னப்பியை பழிவாங்க காத்திருந்த போது தான், அதான் அம்பிகா தனக்கு சாதகமாக மாற்றியுள்ளார். இந்த தகவல்களை எல்லாம் அம்பிகா பொலிசாரிடம் கூற, இளைய மடாதிபதி மகாதேவசாமி கைது செய்யப்பட்டார்.