அம்மிக்கல்லை கணவன் தலையில் போட்டு கொன்ற மனைவி!!

650

காஞ்சிபுரம் பக்கத்தில் உள்ள ஓரிக்கை எனும் பகுதியில் கணவன் தலையில் மனைவி அம்மிக்கல்லை போட்டு கொன்ற சம்பவம் நடந்துள்ளது.இப்பகுதியை சேர்ந்த திருமுருகன் கூலி தொழிலாளி, குடிப்பழக்கமும் உண்டு. இவரது மனைவி சுந்தரி மற்றும் இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

வேலைக்கு சரியாக செல்லாத திருமுருகன் தினமும் குடித்து விட்டு சுந்தரியை அடிப்பது வழக்கம். நேற்று அதிகாலை அதே போல குடித்து விட்டு சுந்தரியிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்.

இதனால் கோபமடைந்த சுந்தரி அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து திருமுருகன் தலையில் போட்டிருக்கிறார்.அதனால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் திருமுருகன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் காவல்துறையினர் திருமுருகனின் சடலத்தை கைப்பற்றினர்.கைது செய்யப்பட்ட சுந்தரி தற்போது காவல்துறை விசாரணையில் உள்ளார்.