அம்ருதா இனி எங்கள் மகள்… யாருக்கும் விட்டுத் தரமாட்டோம் : உருகும் பிரனாயின் தந்தை!!

1102

அம்ருதா

சாதி வெறிக்கு மகனை இழந்தை குடும்பம், தங்கள் மருமகளை காலம் முழுக்க பாதுகாப்போம் என உருக்கமாக தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானாவில் சாதி வெறிக்கு இளைஞர் ஒருவர் இரையான சம்பவம் தேசத்தையே உலுக்கியுள்ளது.

உயர் சாதி இளம்பெண் அம்ருதாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரனாய் என்ற இளைஞரை அவரது மனைவியின் தந்தையே கூலிப்படையை ஏவி பட்டப்பகலில் படுகொலை செய்துள்ளார்.

இந்த நிலையில் மகனை எண்ணி அவரது தந்தையும், காதல் கணவரை எண்ணி அம்ருதாவும் கண்ணீருடன் வீற்றிருக்கும் காட்சிகள் அங்குள்ள பொதுமக்களை கண்கலங்க வைத்துள்ளது.

அம்ருதாவை விட்டுத்தரும் எண்ணமே தங்களுக்கு இல்லை என கூறும் பிரனாயின் குடும்பத்தினர், அவளை நாங்கள் கைவிட்டால் அவள் எங்கு செல்வாள். அவளது வயிற்றில் வளரும் குழந்தையையும் நாங்கள் பாதுகாப்போம், கூடவே தங்கள் மகனின் படுகொலைக்கு நீதி கேட்டு போராடுவோம் என்றார் பாலகிருஷ்ணா.

பிரனாயின் காதலை முதலில் கடுமையாக எதிர்த்த பாலகிருஷ்ணா, அம்ருதா மருமகளாக வந்த பின்னர் அந்த வெறுப்பெல்லாம் கரைந்து, அவளை தம் மகளாகவே ஏற்றுக் கொண்டுள்ளார். அம்ருதா மற்றும் பாலகிருஷ்ணா குடும்பத்தினர் கொஞ்ச காலம் கவனமுடன் இருக்க வேண்டும் என பொலிசார் எச்சரித்துள்ளனர்.

பிரனாய் குடும்பத்தார் அனைவருக்கும் கொலை மிரட்டல் உள்ளது. மட்டுமின்றி தமது கணவரின் கொலைக்கு முக்கிய காரணம் தனது தந்தை தான் என அம்ருதா பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த படுகொலை தொடர்பில் அம்ருதாவின் தந்தை மாருதி ராவு மற்றும் உறவினர் உள்ளிட்ட 3 பேரை பொலிசார் இதுவரை கைது செய்துள்ளனர்.