அரச மரத்தில் ஒளிந்துள்ள அற்புத சக்தி!!

944

அரச மரத்துக்கு அறிவை வளர்க்கும் சக்தி அதிகம். இதன் அடியில் அமர்ந்தாலேயே மனம் தெளிவடையும் என கூறப்படுகின்றது.அரச மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மாவும், நடுப்பகுதியில் மகா விஷ்ணுவும், நுனிப் பகுதியில் பரமசிவனும் வாசம் செய்கிறார்கள் ஆகவே மும்மூர்த்திகளின் சொரூபமாக அரசமரம் திகழ்கிறது.

அதனால்தான் அரசமரத்திற்கு பூஜை செய்வது, பிரதட்சணம் செய்வது, துன்பத்திற்கு காரணமான பாவங்களை போக்கி நல்ல அறிவை பெற்று தரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

எந்தெந்த கிழமைகளில் சுற்ற என்ன பலன் கிடைக்கும்:திங்கள் -மங்களம் உண்டாகும்.செவ்வாய் -தோஷங்கள் விலகும்.புதன் -வியாபாரம் பெருகும்.வியாழன் -கல்வி வளரும்.வெள்ளி -சகல செளபாக்கியம் கிடைக்கும்.சனி – கஷ்டங்கள் விலகி லக்ஷ்மியின் அருள் கிடைக்கும்.
ஞாயிற்றக்கிழமை அன்று மட்டும் அரச மரத்தைத் தொடக்கூடாது.

தீரா நோய் தீர ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் மதியம் 12:00 முதல் 1:30 மணிக்குட்பட்ட வேளையில் அரசமர வேரைத் தொட்டு வணங்கி வர தீராத நோய்கள் தீரும்.அரச மர பகுதியில் வேரைத் தொட்டு வைத்தல் நோய்கள் விரைவில் குணமடையும்.

குறைந்த அல்லது உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள், அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்கள் இனிப்பு பண்டம் அல்லது சர்க்கரை கலந்த நீரை அரச மர வேரில் விட விரைவில் ரத்த அழுத்த நோய் பாதிப்பு குறையும்.

தினமும் கிழக்கு முகமாக நின்று அரச மரத்திற்கு நீர் விட்டு வர பித்ரு தோஷ பாதிப்புகள் குறையும்.ஆயுள் தோஷம் உள்ளவர்கள் (அற்பாயுள் ) சனிக்கிழமை தோறும் அரச மரத்திற்கு நீர் விட்டு தொட்டு வணங்கி வர ஆயுள் கூடும்.