அழகான குழந்தையை பெற்றெடுத்த இளம்பெண் : நான் தான் அதற்கு தந்தை என சண்டையிட்ட 3 கணவர்கள்!!

1545

சண்டையிட்ட 3 கணவர்கள்

இந்தியாவில் இளம் பெண்ணொருவர் குழந்தை பெற்றெடுத்த நிலையில், பிறந்த குழந்தைக்கு 3 பேர் நான் தான் தந்தை என உரிமை கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொல்கத்தாவில் சப்னா மைத்ரான (21) என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக, பிரசவ வலியுடன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

அவரை ஒரு இளைஞர் மருத்துவமனையில் சேர்த்தார். அவர் தான் சப்னாவின் கணவர் என மருத்துவமனை ஊழியர்கள் நினைத்து அவரிடம் விசாரித்த போது அவரும் ஆம் என்றார். பின்னர் பிரசவத்தில் சப்னாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதை சப்னா தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக வைத்திருந்தார்.

இதை பார்த்த ஹர்ஷா கேத்ரி என்ற இளைஞர் மருத்துவமனைக்கு வந்து தான் தான் சப்னாவின் கணவர் என்றும் குழந்தை என்னுடையது தான் என்றும் கூறியுள்ளார். மருத்துவமனை நிர்வாகத்தினர் இந்த விவகாரத்தை பொலிசாரிடம் கொண்டு சென்றனர்.

பொலிசார் விசாரித்த போது ஹர்ஷா தனது திருமண சான்றிதழ், தனது மனைவி தான் சப்னா என்பதற்கான சான்றிதழ்களை காண்பித்தார்.
இதையடுத்து அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்ந்தவர் தான் சப்னாவின் நண்பர் என்று ஒப்புக்கொண்டார். இதுவரை உள்ள குழப்பம் போதாது என்று தற்போது மீண்டும் ஒரு குழப்பம் வந்தது. அந்த மருத்துவமனைக்கு பிரதீப் ராய் என்பவர் வந்தார்.

அவர் தன்னை சப்னாவின் கள்ளக்காதலன் என்றும், தனக்கு பிறந்தது தான் அந்த குழந்தை என்று அவரும் உரிமை கொண்டாட ஆரம்பித்தார். இதன் காரணமாக மருத்துவமனையில் பெரும் சண்டையே வந்தது. ஒரு பெண்ணிற்கு பிறந்த குழந்தைக்கு இரண்டு பேர் கணவர்கள் என சண்டை போட்ட நிலையில் பொலிசாரிடம் இறுதியாக அந்த பெண்ணிடமே இது குறித்து கேட்டனர்.

சப்னா கூறுகையில், திருமண சான்றிதழுடன் வந்தவரே தனது கணவர் மற்றும் அந்த குழந்தையின் அப்பா எனவும், தானும் அவரும் முதலில் காதலித்து வந்ததாகவும் அப்பொழுது தான் கர்ப்பமானதாகவும் தெரிவித்தார்.

பிரதீப் குறித்து பொலிசார் சப்னாவிடம் கேட்டபோது அதற்கு அவர் சரியாக பதிலளிக்கவில்லை. அதனால் தற்போது வரை குழந்தைக்கு உண்மையான தந்தை யார் என்பது தெரியாமலேயே உள்ளது.