அழகு என்ற பெயரில் உதட்டை பெரிதாக்கிய நடிகை : வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!!

668

உதட்டை பெரிதாக்கிய நடிகை

பிரபல நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலமும்மான, நடிகை சாரா கான், உதட்டை பெரிதாக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்.

தற்போது முதல்முறையாக அந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் இவரை விமர்சித்து வருகின்றனர்.

ஒரு சிலர் நல்லவிதமாக அழகாய் இருந்த உதடுகளை இப்படி மாற்றிக்கொண்டது ஏன் என்பது போல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அழகு என்ற பெயரில் இப்படி பாலிவுட் நடிகைகள் தங்கள் தோற்றத்தை மேலும் மெருகூட்ட இப்படி அறுவை சிகிச்சைகள் செய்து கொள்வது தொடர்ந்து வருகிறது.

சமீபத்தில் நடிகை ஸ்ருதியும் தனது முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார் என்று அவரது முகத்தை ரசிகர்கள் கிண்டல் செய்தது குறிப்பிடத்தக்கது.