அழுகிய நிலையில் கிடந்த சடலம்… கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்!!

606

இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்

தமிழகத்தில் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் மனைவி சிவகாமி. ரமேஷுக்கும், சிவகாமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் சில காலமாக கணவரை பிரிந்து சிவகாமி தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக வீட்டை விட்டு சிவகாமி வெளியே வராத நிலையில் நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது சிவகாமி பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் பொலிசார் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொலிசார் பார்த்த போது, சிவகாமியின் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு இருந்தார். அவரது கை மற்றும் உடலில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதுடன் அழுகிய நிலையில் துர்நாற்றத்துடன் உடல் கிடந்தது.

விசாரணையில், அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என என்பது தெரியவந்தது. பொலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிவகாமியை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.