ஆசைக்கு அழைத்த திருநங்கைகள்… வர மறுத்த இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!!

497

சென்னை….

சென்னை, சைதாப்பேட்டை, ஜாபர்கான் பேட்டை, அப்பாதுரை தெருவை சேர்ந்தவர் தமிழ் செல்வன் (41). இவர், வெல்டிங் கான்ட்ராக்டர் தொழில் செய்கிறார். நேற்று அசோக் நகர், 6வது அவின்யூவிற்கு வந்த தமிழ் செல்வன் அங்குள்ள ஏ.டி.எம் மையம் ஒன்றில், ரூ, 10 ஆயிரம் செலுத்த இருந்தார்.

அப்போது, தமிழ் செல்வன், மதுப்போதையில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அங்கிருந்த இரண்டு திருநங்கைகள், தமிழ்செல்வனிடம் ஆசையாக பேசி, தனியாக வா என்றழைத்தனர். கையில் பணம் இருந்ததால், அவர் வர முடியாது என்றார்.

ஆத்திரமடைந்த திருநங்கைகள் , அங்கிருந்த கட்டையை எடுத்து, தமிழ்செல்வனின் தலையில் தாக்கி, அவரிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினர்.

இதனை அடுத்து கே.கே.நகர் அரசு மருத்துவமனையில், தமிழ் செல்வன் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதையடுத்து அவர் அசோக் நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார், வழக்கு பதிவு செய்து, சிசிடிவி கேமிராக்களின் பதிவினை ஆய்வு செய்து, திருநங்கைகளை தேடி வருகின்றனர்.