ஆடம்பர திருமண செலவை நிறுத்தி விட்டு ஏழை மக்களுக்கு உணவளித்த இளம் ஜோடி..!

308

அமெரிக்காவின்…….

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர்கள் பில்லி- எமிலி ஜோடி.இவர்கள் தங்களது திருமண விழாவை ஆடம்பரமாக செய்ய திட்டமிட்டிருந்தனர்.ஆனால் கொரோனா நோய்த் தொற்று காரணமாக இவர்கள் நினைத்தபடி நடக்காமல் போனது.

இந்நிலையில் இந்த ஜோடி தங்களது திருமண நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு திருமணத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்த மொத்த செலவையும் என்ஜிஓ மூலம் “தேங்க்ஸ் கிவ்விங்” தினத்தன்று 200க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு உணவு வழங்கி அசத்தியுள்ளனர். ஜோடிகளின் இந்த செயலானது இல்லினாய்ஸ் மக்கள் மற்றும் நெட்டிசன்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இந்திய மதிப்பில் 4 லட்சம் ரூபாய் செலவு செய்து ஏழை மக்களுக்கு “தேங்க்ஸ் கிவ்விங்” நாளன்று இலவச உணவு அளித்து அசத்தியுள்ளனர். மேலும் இவர்கள் சிகாகோவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து சீரியசான மனநலப் பிரச்சினை பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுகளை இலவசமாக அளித்துள்ளனர்.

இது குறித்து அறுத்து கூறிய பில்லி தங்கள் இல்லற வாழ்க்கையை ஆடம்பரமான முறையில் ஆரம்பிப்பதை காட்டிலும், இப்படி ஒரு சிறப்பான முறையில் துவங்குவதை எண்ணிப் பெருமை அடைகிறோம். மேலும், இப்படியான ஒரு மனைவியை பெற நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். என்னுடைய மனைவி எமிலி மிகவும் புத்திசாலி.அத்துடன் திறமையானவரும் கூட.மக்களின் மீதும் மிக அக்கறை கொண்டவர் எனக்கூறியுள்ளார்.