ஆண் நண்பருடன் செல்போனில் அரட்டை : ஆத்திரத்தில் கணவனால் அரங்கேறிய பயங்கரம்!!

1325

ரத்தினகிரி….

பூட்டுத் தாக்கு கிராமத்தில் பெரிய தெருவை சேர்ந்தவர் ராமு(வயது40). இவரின் மனைவி சரிதா(வயது27). இவர்கள் இருவரும் 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சில ஆண்டுகளுக்கு முன்புதான் குழந்தை பிறந்து இருக்கிறது. ஆனால் பிறந்த குழந்தை உயிரிழந்து விட்டது . இதன் பின்னர் கணவன் மனைவி இருவரும் பெருமுகையில் இருக்கும் தனியார் லெதர் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 25ஆம் தேதி அன்று தனது மனைவி சரிதா திடீரென்று காணவில்லை என ரத்தினகிரி காவல் நிலையத்தில் ராமு புகார் அளித்துள்ளார்.
ரத்தினகிரி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது ராமுவின் வீட்டிற்கு பின்னால் இருக்கும் குடிநீர் கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து போலீசார் அங்கு சென்று கிணற்றில் அழுகிய நிலையில் இழந்த பெண் சடலத்தை மீட்டுள்ளனர். மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போதுதான் அது காணாமல் போன சரிதா என்பது தெரிய வந்திருக்கிறது.

உடனே போலீசார் ராமுவை தேடி இருக்கிறார்கள். ஆனால் ராமு அங்கு இல்லை. அவர் நேராக பூட்டுத் தாக்கு கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் மனைவியை கொன்று விட்டதாக சொல்லி சரணடைந்திருக்கிறார். இதன் பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில் 15 ஆண்டுகளில் திருமணமாகி குழந்தைகள் இல்லாமல் மன உளைச்சலில் இருந்து வந்தேன்.

இந்த நிலையில் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஆண் நண்பரோடு தினமும் செல்போனில் அதிக நேரம் அரட்டை அடித்து வந்தார். பலமுறை கண்டித்து பார்த்தேன். கேட்கவே இல்லை .

அதனால் தான் கடந்த 24 ஆம் தேதி அன்று தூங்கிக் கொண்டிருந்த போது தலையணையை வைத்து அழுத்துக்கொன்று பின்னர் உடலை போர்வையில் சுற்றி தூக்கிச் சென்று வீட்டிற்கு பின்னால் உள்ள கிணற்றில் போட்டு விட்டேன். மனைவி காணாமல் போய்விட்டதாக நாடகமாடினேன் என்று சொல்லி இருக்கிறார்.

இதன் பின்னர் ராமுவை ஆற்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.