ஆபாச படத்தில் நடித்தால் பல லட்சம் பணம்…. 2 பெண்கள் நரபலி தரப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள்!!

1163

பத்தனம்திட்டா….

பத்தனம்திட்டா மாவட்டம் இலந்தூரில் ஐஸ்வரியமும், செல்வமும் பெருக பூஜை செய்வதாக போலி மந்திரவாதியான முஹம்மது ஷாஃபி என்ற ஷிகாப் வழிகாட்டுதல்படி பாரம்பர்ய வைத்தியர் பகவல் சிங், அவரின் மனைவி லைலா ஆகியோர் நரபலியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி ரோஸி (59) மற்றும் தமிழகத்தின் தர்மபுரியை சேர்ந்த பத்மா (52) ஆகியோர் நரபலிக்கு கொல்லப்பட்டுள்ளனர். முதலில் ரோஸிக்கு பத்து லட்சம் கொடுப்பதாக கூறி முஹம்மது பகவல் சிங்கின் வீட்டுக்கு அழைத்துச் சென்று இரவு நேரத்தில் நரபலி பூஜை செய்து கழுத்தை அறுத்து கொன்று 22 துண்டுகளாக வெட்டியுள்ளனர்.

பின்னர் குழிதோண்டி உடலை புதைத்து, அதன் மீது மஞ்சள் நட்டு வைத்துள்ளனர். முதல் பூஜையால் பலன் கிடைக்காததால் மற்றொரு நரபலி கொடுக்க வேண்டும் என பத்மாவை அழைத்து சென்று அதே போல கொன்று புதைத்தனர்.

இதனிடையில் கொல்லப்பட்ட தமிழகப்பெண் பத்மா தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரின் கணவர் பெயர் ரங்கன். இருவரும் கடந்த இருபது வருடகளுக்கு மேலாக கேரளாவில் பணிபுரிந்து வருவதாக தெரியவந்துள்ளது.

நரபலி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரளா மாநில காவல்துறையினர், போலி மந்திரவாதியான ஷாபியும், மந்திரவாதத்தில் ஈடுபாடு கொண்ட பகவல் சிங்கும் குறுகிய காலத்திலேயே நெருக்கமானார்கள். பெண்ணை நரபலி கொடுத்தால் செல்வம் சேரும் என்று ஷாபி கூறியுள்ளார். கணவனை விவாகரத்து செய்த ரோஸி, காலடி பகுதியில் மற்றொருவருடன் வசித்து வந்தார்.

ரோலியை அணுகிய ஷாபி, தனக்குத் தெரிந்த ஒருவர் ஆபாசப் படம் எடுப்பதாகவும், அதில் நடித்தால் 10 லட்சம் பணம் கிடைக்கும் என்றும் ஆசை காட்டியுள்ளார். அதற்கு ரோஸி சம்மதித்துள்ளார்.

பின்னர், ரோஸியை பகவல் சிங்கின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ஆபாச படத்தில் நடிப்பதற்காக என்று கூறி, ரோஸியை கட்டிலில் படுக்க வைத்து கை, கால்களை கட்டி பின்னர் கொன்றனர். இதே போல ஆசை வார்த்தை கூறியே பத்மாவையும் கொன்றுள்ளனர் என கூறியுள்ளனர்.