இது ஒரு மோசமான ஆடை என விமர்சித்த ரசிகர்: பதிலடி கொடுத்த நடிகை பிரியா

811

நடிகை பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பதிவேற்றம் செய்த புகைப்படத்தை பார்த்து ரசிகர் ஒருவர் மோசமாக உள்ளது என பதிவிட்டதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

கறுப்பு நிறத்தில் சற்று கண்ணாடியான ஆடையை அவர் அணிந்திருந்துள்ளார். இதனைப்பார்த்த ரசிகர், உங்கள் மீது அதிக நம்பிக்கை இருந்தது. இந்த புகைப்படத்தை ரசிப்பவர்கள் மோசமானவர்கள். என்னைப்போன்ற ரசிர்களுக்கு இதுபோன்ற புகைப்படம் பிடிக்காது என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள பிரியா, உங்களை போன்ற கேவலமான ஆணுக்கு கனவுக்கன்னியாக இருக்க நான் விரும்பவில்லை. என் புகைப்படத்தில் எதுவும் தவறாக தெரியவில்லை. இந்த புகைப்படத்தை பெரிதாக்கி பார்த்து அபத்தமாக பேசி மற்றவர்களை பற்றி முன்தீர்மானத்தோடு பேசும் உங்களை போன்றவர்கள் கலாசாரத்தை உயர்த்தி பிடிப்பதாக ஆகிவிடுமா?

எனது 1.5 இன்ச் வெளிப்படையான ஆடையை பற்றி கவலைப்படும் விமர்சனங்களை படிப்பதை விட, அதை எளிதாக கடந்து செல்லவே விரும்புகிறேன் என கூறியுள்ளார்.