இது தான் நான் செய்த தவறா : தீக்குளித்து துடி துடிக்க இறந்த பெண் பகீர் வாக்குமூலம்!!

934

தமிழகத்தின் திருவேற்காடு பகுதியில் காவல் நிலையம் முன்பு நர்ஸ் ஒருவர் தீக்குளித்த சம்பவம் தொடர்பில் அவர் அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவேற்காடு செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் ரேணுகா. செவிலியரான இவர் தனது வீட்டின் அருகே கழிவறை ஒன்றை கட்டி வந்தார்.

இதனால் அவரின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த அமிர்தவள்ளிக்கும் ரேணுகாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து அமிர்தவள்ளி திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் இரு தரப்பினரையும் பொலிஸார் அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் அ.தி.மு.க பிரமுகர்கள் சிலரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு அமிர்தவள்ளிக்கு ஆதரவாகப் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ரேணுகா மனம் உடைந்தார். உடனே அவர், மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டு காவல் நிலையத்திலேயே தீவைத்துக்கொண்டார்.

இதில் அதிர்ச்சியடைந்த பொலிசார் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ரேணுகா மரணமடைந்துள்ளார். இந்த நிலையில், பொலிஸார் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஒரு தரப்புக்கு ஆதரவாக பேசுவதால்தான் தான் தற்கொலை செய்துகொண்டதாக இறப்பதற்கு முன் அவரது உரையாடல் வெளியாகியுள்ளது.

இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், நர்ஸ் ரேணுகா இறப்பதற்கு முன், நடந்த சம்பவத்தை முழுமையாகப் பதிவு செய்துள்ளார்.

அந்த வாக்குமூலம் அடிப்படையில்தான் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. பிரமுகர்களின் சிபாரிசு, லஞ்சம் காரணமாகத்தான் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளனர் என்றனர்.

தற்கொலைக்கு முன் நர்ஸ் பேசிய ஒடியோவில் நான் கழிவறைக் கட்டியது தவறா என்று மனம் உடைந்து கண்ணீர்மல்க கூறியுள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

மேலும், காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் ரேணுகாவை சிலர் மிரட்டியுள்ளனர். இதனால்தான் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் என்றனர்.