இந்தியாவின் முதல் விசித்திர திருமணம்:ஆணாக மாறிய காதலி பெண்ணாக மாறிய காதலன்!!

724

இந்தியாவிலேயே முதன்முறையாக காதலன் பெண்ணாகவும், காதலி ஆணாகவும் மாறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் சூர்யா (25). நடன கலைஞரான இவர் சினிமாவில் துணை நடிகராகவும் உள்ளார். இவரது தோழி இசான்கேசான் (19).

2013-ம் ஆண்டு சூர்யாவும், இசான்கேசானும் சந்தித்து அவர்களுக்குள் நட்பு ஏற்பட்ட நிலையில் பின்னர் காதலாக மாறியது.

இருவரும் 6 மாதம் காதலித்தனர். அப்போது இருவரும் வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

காதலன் பெண்ணாகவும், காதலி ஆணாகவும் மாறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2014-ம் ஆண்டு சூர்யா ஆபரேசன் மூலம் பெண்ணாக மாறினார். அவரது காதலி 2015-ம் ஆண்டு ஆபரேசன் மூலம் ஆணாக மாறினார்.

இதையடுத்து தங்கள் திருமணத்துக்கு பெற்றோரிடம் சம்மதம் கேட்க அவர்களும் சம்மதித்தனர்.

அதன்படி அடுத்த மாதம் கேரள அரசின் திருமண சிறப்பு திருத்த சட்டப்படி காதலர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது.