இந்திய கிரிக்கெட் அணி வீரர் சேவாக்கின் மனைவி கூறியுள்ள பரபரப்பு புகார்!!

784

சேவாக்கின் மனைவி

தனது கையெழுத்தை முறைகேடாகப் பயன்படுத்தி ரூ.4.5 கோடி கடன்பெற்றதாகத் தனது தொழில் கூட்டாளி மீது நடவடிக்கை எடுக்கக் கூறி கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மனைவி புகார் கொடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக். இவரது மனைவி ஆர்த்தி. இவரது தொழில் கூட்டாளிகள், தனது கையெழுத்தை முறைகேடாகப் பயன்படுத்தி நிறுவனம் ஒன்றிடம் ரூ.4.5 கோடி கடன் பெற்றுள்ளார்கள் என்றும் அந்தப் பணத்தைத் திருப்பி கொடுக்காமல் தன்னை சிக்க வைத்துள்ளதாகவும் போலீசில் புகார் செய்துள்ளார்.

அவரது புகாரில், தனது கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தியும், கணவர் வீரேந்திர சேவாக்கின் பெயரை தவறாகப் பயன்படுத்தியும் இந்த கடன் வாங்கப்பட்டிருக்கிறது என்றும் இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த கடனுக்காக முன் திகதியிட்டு வழங்கப்பட்ட காசோலைகளும் பணம் இல்லாமல் திரும்பி சென்றுள்ளன என்றும், இதனால் தன்னை இதில் சிக்க வைத்துள்ள தொழில் கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்த்தி கூறியுள்ளார். இதையடுத்து பொலிசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.