இந்த பழக்கம் உங்கள் மரணத்தை தள்ளிப்போடுமாம்: ஆய்வில் கண்டுபிடிப்பு!!

1074

இன்றைய இயந்திர உலகில் வயது வேறுபாடின்றி அனைவரும் நிம்மதியான தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர்.வழக்கத்திற்கு மாறான இப் பழக்கமானது ஆயுளை குறைக்கக்கூடியது.

இந்நிலையில் புதிய ஆய்வு ஒன்றில் சற்று ஆறுதல் தரும் விடயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதாவது வார இறுதி நாட்களில் நீண்ட நேரம் தூங்குவது ஆயுட் குறைவை தடுக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

38,000 பேரை வைத்து மேற்கொண்ட ஆராய்ச்சியிலேயே இந்த ஆறுதல் தரும் விடயம் வெளியாகியுள்ளது.மேலும் நாளாந்தம் 5 மணித்தியாலத்தினை விடவும் குறைவான நேரம் தூங்குபவர்கள் ஆயுட் குறைவை எதிர்நோக்கி வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்துள்ளனர்.

சுவீடனைச் சேர்ந்த Stockholm பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே இந்த ஆய்வினை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.