மீன்களில் பலவகை உண்டு. அதில் சில வகை மீன்கள் நம் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தாலும், சில வகை மீன்கள் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும்.
கானாங்கெளுத்தி மீன்: கானாங்கெளுத்தி மீனில் உயர் ரக மெக்னீசியம் உள்ளது. இது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாக இருந்தாலும் அதில் உள்ள அதிகளவு பாதரசம் நம் உடலுக்கு தீய தாக்கத்தை உண்டாக்கும்.
விலாங்கு மீன்: மஞ்சள் அல்லது வெள்ளி நிறத்தில் உள்ள விலாங்கு மீனை அதிகளவு சாப்பிட்டால், அது நம் உடலுக்கு ஆபத்தாகிவிடும். ஏனெனில் அதில் உள்ள அதிகப்படியான பாலிகுளோரினேடட் பைபினைல் மற்றும் பாதரசம் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
வாளை மீன்: வாளை மீனில் அதிகளவு பாதரசம் உள்ளது. இது அதிகளவு நம் உடலில் சேரும் போது, அது மூளையின் செல்களை சேதமடைய செய்துவிடும்.
சூரை மீன்: நீல நிற துடுப்பு மற்றும் பெரிய கண்கள் உடைய இந்த சூரை மீனில் பாதரசத்தின் அளவு அதிகமாக உள்ளது. எனவே அதை அதிகம் எடுத்துக் கொண்டால், அது நம் உடலுக்கு கேடு விளைவிக்கும்.
சால்மன் மீன்: சால்மன் மீன்களில் கரிம மாசு நிலைபெற்று இருப்பதால், அது நீரிழிவு மற்றும் உடல்பருமன் பிரச்சனையை அதிகரிக்க செய்துவிடும்.
சுறா மீன்: சுறா மீனிலும் பாதரசம் அதிகம் உள்ளது. அதனால் இந்த சுறா மீனை அதிகம் சாப்பிடக் கூடாது. இதனால் பல உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்.