நடிகை..

தமிழ் சினிமாவில் பல திறமையான நடிகைகள் இருந்தாலும் வாரிசு நடிகைகள் நுழைந்து தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்வார்கள் என்பதெல்லாம் காலம் காலமாக பார்த்துவந்தது தான்.
ஆனால், அதையும் தாண்டி பல பிரச்சனைகள், சர்ச்சைகள், பல தோல்விகள் என எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் துவண்டுவிடாமல் களத்தில் நின்று போராடி ஜெயித்து காட்டியவர் நடிகை நயன்தாரா.

நயன்தாரா கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்த ரோல்களை தேர்ந்தெடுத்து நடித்து தனது திறமையை மக்களுக்கு வெளிக்காட்டி லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெற்றுள்ளார்.
தற்போது ஜவான் வெற்றிக்கு பிறகு பாலிவுட்டிலும் ஸ்ட்ராங்கான இடத்தை தக்கவைத்திருக்கிறார். ஒரு படத்திற்கு ரூ. 10 கோடி சம்பளம் வாங்கும் நயன்தாரா இந்த ஆண்டு அதிகம் சம்பளம் வாங்கிய தமிழ் நடிகைகள் லிஸ்டில் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

அதையடுத்து நடிகை தமன்னா பாலிவுட் , கோலிவுட் என படு பிசியாக ரெக்கைகட்டி பறந்துக்கொண்டிருக்கிறார். இவர் ஒரு படத்திற்கு ரூ. 7 கோடி சம்பளம் வாங்குகிறார்.
சமந்தா இந்த ஆண்டு நிறைய தோல்வி படங்களை கொடுத்தார். அவரின் குஷி திரைப்படம் மட்டும் ஓரளவிற்கு ஓடியது. இவர் ஒரு படத்திற்கு ரூ. 4 கோடி சம்பளம் வாங்குவது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷா பொன்னியின் செல்வன், லியோ என பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு ரூ. 5 கோடி சம்பளம் வாங்குவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு படத்திற்கு ரூ. 3 கோடி சம்பளம் வாங்குவது குறிப்பிடத்தக்கது.