இன்னும் சில நாட்களில் திருமண நாள் : பரிதாபமாக இறந்த பிரபல இசையமைப்பாளரின் காதல் கதை!!

1294

பாலாபாஸ்கர்

பிரபல இசையமைப்பாளரான பாலாபாஸ்கர் இன்னும் சில நாட்களில் திருமண நாள் கொண்டாடவிருந்த நிலையில் பரிதாபமாக இறந்துள்ளார். கடந்த 25-ஆம் திகதி பாலாபாஸ்கர் தன் குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று திரும்பும் வழியில் திருவனந்த புரம் அருகே சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

இந்த விபத்தில் அவரது 2 வயது மகள் தேஜஸ்னி பரிதாபமாக இறந்தார். இருப்பினும் பாலாபாஸ்கர் மற்றும் மனைவி லட்சுமி ஆகிய இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் செவ்வாய் அன்று பாலாபாஸ்கர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த பாலாபஸ்கர் குறித்து பல தகவல்கள் வெளிவருகின்றன. அந்த வகையில் இவர் தன்னுடைய மனைவியை எப்படி காதல் திருமணம் செய்தார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது பாலாபாஸ்கர் திருவனந்தரபுத்தில் உள்ள யூனிவர் சிட்டியில் கடந்த 2000-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். அப்போது அங்கு தான் அவர் லட்சுமியை முதலில் பார்த்துள்ளார். இருவரும் ஒரே வகுப்பறை என்பதால் பேசியுள்ளனர். ஆனால் பாலா சந்தித்த மூன்றாவது நாளிலே லட்சுமியிடம் தன்னுடைய காதலை சொல்லியிருக்கிறார்.

ஆனால் லட்சுமி அதற்கு முதலில் மறுத்துள்ளார். அதன் பின் பாலாவின் உண்மையான காதலை உணர்ந்த இவர் காதலை ஏற்றுக் கொண்டார். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஏனெனில் பாலா எந்த ஒரு வேலையும் இல்லாத காரணத்தினால் அதை சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.

எங்கே லட்சுமி நம்மளை விட்டு சென்றுவிடுவாளோ என்று பயந்த பாலா முதலில் திருமணம் அதன் பின் படிப்பை பார்த்து கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளார். இதனால் இரண்டு பேரின் பெற்றோரையும் அழைக்காமல், பாலா மற்றும் லட்சுமி பதிவு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். அதன் படி கடந்த 2000-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ஆம் திகதி திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணத்திற்கு சில நண்பர்கள் மட்டுமே வந்துள்ளனர். திருமணத்திற்கு பின் படிப்பை முடித்த பாலா இசையமைப்பாளராக உருவெடுக்க ஆரம்பித்தார். பல மேடைகளில் தன்னுடைய திறமையை காட்டினார்.

இதையடுத்து அவருக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் உருவாகியது. இந்த தம்பதிக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது கடந்த 2016-ஆம் ஆண்டு மே மாதம் 14-ஆம் திகதி ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் இரு வீட்டாரின் பெற்றோரும் இவர்களை ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில் தான் கடந்த மாதம் குடும்பத்தினருடன் கோவிலிக்கு சென்று திரும்பிய போது இந்த விபத்து நடந்துள்ளது.