இன்றைய ராசிபலன் (08-11-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

3558

இன்றைய ராசிபலன்…

மேஷம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் மேற்பார்வையிலேயே முடிப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவு நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்‌. உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். கவனம் தேவைப்படும் நாள்.

ரிஷபம்

எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வாகனம் தொந்தரவு தரும். உடல் அசதி சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

மிதுனம்

திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகள் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

கடகம்

உணர்ச்சிப் பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

சிம்மம்

கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும்‌. எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள்‌‌. உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். மனநிறைவு கிட்டும் நாள்.

கன்னி

சந்திராஷ்டமம் இருப்பதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரி உங்களை புரிந்து கொள்ள மாட்டார்.பொறுமை தேவைப்படும் நாள்.

துலாம்

சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள்‌. தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

விருச்சிகம்

உற்சாகமாக இருப்பீர்கள். பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்‌. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.

தனுசு

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.

மகரம்

பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கும்பம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சொத்துப் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். துணிச்சலுடன் செயல்பட வேண்டிய நாள்.

மீனம்

குடும்பத்தில் இதுவரை இருந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரம் சூடு பிடிக்கும்‌. உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.