இன்றைய ராசிபலன்…
மேஷம்
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கோபம் குறையும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.
ரிஷபம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
மிதுனம்
குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல்அடையலாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வரக்கூடும். பொறுமை தேவைப்படும் நாள்.
கடகம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சிறப்பான நாள்.
சிம்மம்
உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர் நண்பர்களால் ஆதாயம் உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். புகழ் கௌரவம் உயரும் நாள்.
கன்னி
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிலும் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.
துலாம்
சந்திராஷ்டமம் இருப்பதால் எதையோ இழந்ததை போல ஒருவித கவலைகள் வந்து செல்லும். நண்பர்கள் உறவினர்கள் மூலம் சிலர் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள்.வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
விருச்சிகம்
பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார்கள். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சிலசூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். புதுமை படைக்கும் நாள்.
தனுசு
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.
மகரம்
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.
கும்பம்
எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். தடைகளை தாண்டி வெல்லும் நாள்.
மீனம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். தைரியும் கூடும் நாள்.