இன்ஸ்டாகிரமில் கோடிகளில் புரளும் பிரபலங்கள்…நொடிக்கு நொடி பணமாக மாறும் லைக்குகள்!

889

இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவையின் வருகைக்கு பிறகு செய்திகளின் தாக்கம் பன்மடங்கு அதிகரித்து காணப்படுகிறது.

சமூக இணையங்கள் வந்த பிறகு. பிரபலங்கள் தங்கள் முகவரியில் பகிரும் பதிவுக்கு கீழேயே ஒரு மோதல் வெடிக்கிறது. அந்த மோதல் பல குழுக்கள், பல்வேறு பக்கங்களுக்கு பரவி டிரெண்ட் டாகிவிடுகிறது. மேலும், தங்களுக்கு பிடித்த / பிடிக்காத தலைவர்கள், வீரர்கள், நட்சத்திரங்களை நேரடியாக பாராட்டவும், திட்டவும் கூட இது வழிவகுகிறது.

இது போன்ற ரசிகர்களின் லைக்ஸ் மூலம் பிரபலங்கள் சம்பாதிக்கவும் செய்கிறார்கள். இன்ஸ்டாகிராம் மூலம் அதிகம் பணம் சம்பாதிக்கும் பிரபலங்கள் யார் யார் என்று பார்ப்போம்.

விராட் கோலி:விராட் கோலி ஒரு நண்பரை குறித்து தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டால் அவருக்கு 1,20,000 அமெரிக்க டாலர்கள் கிடைக்கும்.அது மட்டுமின்றி அனுஷ்காவை திருமணம் செய்த பிறகு, இன்ஸ்டாகிராமில் கோலியின் பிரொபைல் மதிப்பு கூடி இருக்கிறது என்று அறியப்படுகிறது.

இப்படி சமூக தளங்களில் பெய்டு ப்ரமோஷன் மூலமாக அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலில் உலக அளவில் விராட் கோலி 17வது இடத்தை பிடித்திருக்கிறார்.இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கும் இந்தியர்களில் விராட் கோலி பெயர் தான் முதன்மையாக இருக்கிறார்.

கைலி ஜென்னர்:அமெரிக்கன் ரியாலிட்டி டெலிவிஷன் ஷோ பர்சனாலிட்டி, மாடல் மற்றும் தொழிலதிபர் என பன்முகம் கொண்ட கைலி ஜென்னர் ஒரு பதிவுக்கு மில்லியன் டாலர்கள் பெற்று முதன்மை இடத்தை வகிக்கிறார்.

விராட் கோலி NBA சூப்பர்ஸ்டாராக கருதப்படும் ஸ்டீபன் கரியை விட பத்தாயிரம் டாலர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்.அவர் 21.3 மில்லியன் பின்தொடர்பாளர்களுடன் ஒரு பதிவுக்கு 1,10,000 டாலர்கள் சம்பாதிக்கிறார்.

ரொனால்டோ:கால்பந்தாட்ட முன்னணி வீரர் ரொனால்டோ 136 மில்லியன் பின்தொடர்பாளர்கள் கொண்டிருக்கிறார்.இவர் தனது ஒரு பதிவுக்கு 7,50,000 அமெரிக்க டாலர்கள் பெறுகிறார்.

நெயமர்!:பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெயமர் ஆறு இலட்சம் டாலர்களை சம்பாதிக்கின்றார்.

பிற பிரபலங்கள்:அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லெஜண்ட் மெஸ்ஸி ஐந்து இலட்சம் டாலர்களும் பெறுகிறார்கள்.ஓய்வுபெற்ற முன்னாள் கால்பந்தாட்ட வீரர் டேவிட் பக்கம் ஒரு பதிவுக்கு மூன்று இலட்சம் டாலர்களும் பெறுகிறார்.

ஓய்வுபெற்ற குத்துசண்டை லெஜண்ட் மேவெதர் 20.7 மில்லியன் பின்தொடர்பாளர்களுடன் 1,07,000 டாலர்கள் பெற்றுவருகிறார்.