பட வாய்ப்புக்காக யாராவது படுக்கைக்கு அழைத்தால் என்ன செய்ய வேண்டும் என்று பாலிவுட் நடிகை ஆலியா பட் தெரிவித்துள்ளார். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றி ஒவ்வொரு நடிகையாக பேசத் துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்டின் மகளும், நடிகையுமான ஆலியா பட்டும் இது குறித்து பேசியுள்ளார். பட வாய்ப்புக்காக படுக்கை பற்றி அவர் கூறியதாவது,
படுக்கை திடீர் என்று யாரை பார்த்தாலும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து பேசுகிறார்கள். இது குறித்து பேசினாலே நெகட்டிவாக உள்ளது. சினிமா துறை மோசமானது என்று மக்கள் நினைக்கிறார்கள்.
வாய்ப்பு கிடைப்பதற்காக பல ஆண்களும், பெண்களும் மோசமான சூழ்நிலையை சந்திக்க வேண்டியுள்ளது என்பது எனக்கு புரிகிறது. இந்த துறையில் வேலை கிடைக்க ஒவ்வொருவரும் போராடுகிறார்கள்.
அப்படி போராடுபவர்களின் நிலையை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். உலகம் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது சர்வதேச பிரச்சனை ஆகும்.
நடிக்கும் ஆசையில் வருபவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். யாராவது படுக்கைக்கு அழைத்தால் உடனே பெற்றோரிடம் தெரிவித்து பின்னர் போலீசில் புகார் அளியுங்கள் என்கிறார் ஆலியா.
பயம் படுக்கைக்கு அழைப்பவர்கள் சினிமா துறையில் பெரிய ஆட்களாக இருப்பதால் பலர் வெளியே சொல்லவே பயப்படும் நேரத்தில் ஆலியாவோ போலீசில் புகார் அளிக்குமாறு கூறுகிறார்.
சத்ருகன் சின்ஹா வாழ்க்கையில் முன்னேற படுக்கைக்கு செல்லும் பழக்கம் உள்ளது என்று பாலிவுட் டான்ஸ் மாஸ்டர் சரோஜ் கான் மற்றும் நடிகர் சத்ருகன் சின்ஹா ஆகியோர் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
