இளவரசரை திருமணம் செய்ய காத்திருக்கிறேன்.. பிரித்தானிய அரண்மனையில் பிரபல தமிழ் நடிகை!!

729

சமீபத்தில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் நடிகை மேகன் மார்கல் திருமணம் நடைபெற்றது உலகம் முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்தது.

தற்போது இளவரசரை திருமணம் செய்துகொண்ட நடிகை மேகன் மார்கல் 22 வருடங்களுக்கு முன்பு பிரித்தானியா அரண்மனை முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் பரவியது.

அதே இடத்தில் தற்போது பிரபல தமிழ் காமெடி நடிகை வித்யு ராமன் ஒரு புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.”நேற்று முன்தினம் தான் புகைப்படம் எடுத்தேன்.. இன்னும் 22 வருடம் இளவரசருக்காக காத்திருக்க வேண்டியதுதான்” என கூறியுள்ளார்.

மேகன் மார்கல் போல தனக்கும் வருங்காலத்தில் இப்படி ஒரு வாய்ப்பு அமையலாம் என அவர் காமெடியாகவே இப்படி தெரிவித்துள்ளார்.