பிரித்தானிய இளவரசி ஹரி – மெர்க்கல் திருமணம் மே 19 ஆம் திகதி கோலாகலமாக நடந்து முடிந்தது.திருமணத்திற்கு முன்னரே குழந்தை பெற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என மெர்க்கல் கூறினார்.
மேலும் இளவரசர் ஹரியும் தனக்கு பிறக்கப்போகும் குழந்தைகளை எனது தாய் டயானாவின் குணநலன்களுடன் வளர்ப்பதற்கு முடிவு செய்துள்ளேன், இது எனது ஆசை என கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மெர்க்கல் பிறக்கப்போகும் தனது குழந்தைக்காக தற்போதே பரிசுப்பொருட்கள சேமிக்க ஆரம்பித்துவிட்டார். மெர்க்கல் கூறியதாவது, ஒரு சாதராண வாழ்க்கை எவ்வாறு வாழ வேண்டும் என்பதை எனது தாய் எனக்கு கற்றுக்கொடுத்துவிட்டார். சிறுவயதில் இருந்தே எனக்கு தேவையான பொருட்களை நானே வாங்கிகொள்ள பழகிக்கொண்டேன்.
இப்படி ஒரு வாழ்க்கையை எனக்கு அமைத்து கொடுத்த எனது அம்மாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இப்படி நான் வாழ்ந்த காரணத்தாலே, எனது குழந்தைகளையும் என்னால் நன்றாக வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என கூறியுள்ளார்.