உத்தரபிரதேச மாநிலம்…..
ஹர்டோயின் பென்கஞ்ச் கோட்வாலி போலீசாருக்கு வயலில் இளைஞர் ஒருவர் சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது, இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்தனர்.
அது குறித்து போலீசார் விசாரித்ததில் அது ராம்குமார் என்பது தெரிந்தது, அந்த இளைஞன் மாதாப் கிராமத்தைச் சேர்ந்த உறவுக்கார பெண்ணான உறவு முறையில் அத்தையான பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுடன் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இது அந்தப் பெண்ணின் சகோதரர்களுக்கு தெரிய வந்தது, பலமுறை அந்த இளைஞனை அவர்கள் எச்சரித்து வந்தனர், ஆனால் அதை அவர் பொருட்படுத்தாமல் இருந்து வந்ததால் அந்த பெண்ணின் சகோதரர்கள் கோடாரியால் அந்த இளைஞனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததும் தெரியவந்தது.
கொலையில் ஈடுபட்டவர்கள் மோகித் மற்றும் ராகுல் என்பது போலீசாருக்கு தெரியவந்தது, பின்னர் போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர், போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொலைக்கான காரணத்தை குறித்து ராகுல் வாக்குமூலம் அளித்தார், அதில், எனது சகோதரியுடன் ராம்குமார் தகாத உறவில் ஈடுபட்டு வந்தார், அவர் எங்களமு உறவினர்தான், எனது சகோதரியுடன் ராம்குமார் அடிக்கடி தனிமையில் உடலுறவில் ஈடுபட்டு வந்தார், அதை நாங்கள் கண்டித்தோம், பலமுறை எச்சரித்தோம், ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை,
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் எனது சகோதரியை சந்தித்தார் அப்போதுதான் அவரை நாங்கள் கோடாரியால் வெட்டி வயலில் வீசினோம் என கூறினார். மேலும் இது குறித்து தெரிவித்துள்ள போலீசார், தகாத உறவின் காரணமாக, இளைஞன் படுகொலை செய்யப்பட்டதாக கூறினர்,
இளைஞன் அத்தையை காதலித்து வந்த நிலையில் மாமாக்களால் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார், இருவரிடமிருந்தும் கொலைக்கு பயன்படுத்திய கோடாரி கைப்பற்றப்பட்டது, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.