உணவு கூட இல்லாமல் பிஞ்சுக்குழந்தையுடன் சீனாவில் சிக்கியிருக்கும் பிரித்தானிய தம்பதி!!

548

நான்கு வார குழந்தையுடன் வுஹானில் சிக்கித் தவிக்கும் பிரித்தானிய தம்பதி, சொந்த நாட்டிற்கு அழைத்து செல்ல வந்த விமானத்தை தவறவிட்டுவிட்டதாக வே தனை தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவை சேர்ந்த ஆடம் பிரிட்ஜ்மேன் (33) தனது சீன மனைவி சு மற்றும் மகன் ஆஸ்டின் ஆகியோருடன், கொரோனா வைரஸ் உருவானதாக நம்பப்படும் வுஹான் பகுதியில் சி க்கித் த வித்து வருகிறார்.

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வரை 259 பேர் உ யிரிழந்திருப்பதோடு, 6000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் வெ டிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் பிறந்த தனது மகனின் உடல்நிலை குறித்து பெரும் க வலையடைவதாக ஆடம் கூறியுள்ளார்.

வியாழக்கிழமை அன்று பிரித்தானியர்களை அழைத்து செல்வதற்காக விமானம் வந்திருப்பது குறித்து சில மணி நேரங்களுக்கு முன்னரே தங்களுக்கு தூதரகத்திலிருந்து அழைப்பு வந்ததால், சரியான நேரத்தில் சென்றடைய முடியவில்லை என கூறியுள்ளார்.

தற்போது விமானத்தை தவறவிட்டிருப்பதால், ஆஸ்டினுக்கு தேவைப்படும் மருந்துகளை வாங்க பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

‘வைரஸ் காரணமாக நாங்கள் மருத்துவமனைக்கு செல்ல விரும்பவில்லை. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. எங்களுக்கு அணுகக்கூடிய பல்வேறு வகையான உணவுகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன என வே தனை தெரிவித்துள்ளார்.