காஞ்சிபுரம்….
காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு சீனிவாசா நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ். இவருக்கு வயது 24 ஆகும். பில்டிங் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம் போல நேற்று பணியை முடித்துவிட்டு மதுரவாயல் மேம்பாலம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது மேம்பாலத்தின் கீழ் டார்ச் லைட் அடித்த படி திருநங்கைகள் அவரது வாகனத்தை வழிமறித்து, பாலியல் உறவுக்கு அழைத்துள்ளனர். அதற்கு அவர் உடன்பட மறுத்துள்ளார். பிறகு வாகனத்தை எடுக்க முயன்றுள்ளார். அதற்குள்ளாக மேம்பாலம் அருகே உள்ள புதரில் இருந்து வெளியே வந்த இரண்டு பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டியுள்ளனர்.
2 சவரன் தங்கச் சங்கிலி மற்றும் 10 ஆயிரம் ரூபாய், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். பாதிக்கப்பட்டவர் இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற குற்றப்பிரிவு போலீசார் திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்று அந்த வழியே வரும் வாகன ஓட்டிகளிடமிருந்து தங்க செயின், மோதிரம், செல்போன் பணம் உள்ளிட்டவற்றை கத்தியை காட்டியும் தாக்கியும் வழிப்பறி செய்து வந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து வழிப்பறியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் இருவரை மடக்கி பிடித்த போலீசார், காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற தொடர் சம்பவங்கள் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.