அவன் சுர்ஜித் கிடையாது..

தமிழகத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உ யிரிழந்த சுர்ஜித்தின் புகைப்படத்துக்கு பதிலாக நித்திஷ் என்ற குழந்தையின் புகைப்படம் அதிகம் பகிரப்படுவதால் அவரது பெற்றோர் வேதனை அடைந்துள்ளனர்.

திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் திகதி மாலை சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தான்.

அவனை உயிருடன் மீட்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் நேற்று முன்தினம் ச டலமாகவே மீட்கப்பட்டான். இதற்கு முன்னர் சுர்ஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் சுர்ஜித்துக்கு பதிலாக வேறு ஒரு சிறுவனின் டிக்டாக் வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்டன. வேலூர் மாவட்டம் கொல்லமங்களம் பகுதியைச் சேர்ந்தவர் முனிவேல். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு 2 வயதில் நித்தீஷ் என்ற மகன் உள்ளார்.

இந்த குழந்தை டிக் டாக்கில் நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் நித்தீஷின் பெற்றோர் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் உ யிரோடு இருக்கும் தங்கள் மகனின் புகைப்படம் அதிகம் பகிரப்படுவது வருத்தம் அளிப்பதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.