எதுவும் சொல்லாமல் கட்டிப்பிடித்தார் : நடிகர் அர்ஜுன் புகழுக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது : நடிகை மீது மாமனார் புகார்!!

847

நடிகர் அர்ஜுன்

நடிகை ஸ்ருதி ஹரிஹரன், அர்ஜுன் மீது அத்துமீறி நடந்து கொண்டதாக மீ டூ மூலமாக புகார் கூறியுள்ளார். ஸ்ருதி ஹரிஹரன் தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்ட கருத்தில், ’2016 ஆம் ஆண்டு நடிகர் அர்ஜுனுடன் இருமொழியில் தயாரான நிபுணன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். எங்களுக்கு இடையே ரொமான்டிக் காட்சி படமாக்கப்பட்டது.

இருவரும் கட்டிப் பிடிக்க வேண்டியிருந்தது. அப்போது ஒத்திகை யின் போது, நாங்கள் எங்கள் வசனங்களை பேசிப் பார்த்தோம். அர்ஜுன் என்னை கட்டிப்பிடித்தார். முன்கூட்டியே எதுவும் சொல்லாமல், கட்டிப் பிடித்தவாறு என் முதுகில் கைகளால் மேலும், கீழும் தடவினார். என் உடலோடு மிகவும் நெருக்கமாக இழுத்து அணைத்துக் கொண்டார்.

உடனடியாக இயக்குநரிடம் இப்படியொரு காட்சி இருக்கிறதா எனக் கேட்டேன். பதில் இல்லை. நடப்பதை நினைத்து திகிலுற்றேன். சினிமாவின் இது யதார்த்தம் என்பதை உணர்ந்தேன். இது தவறு என்பதையும் உணர்ந்தேன். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. கோபமாகதான் இருந்தது.

என்னுடைய இக்கட்டான சூழ்நிலையை இயக்குநரும் உணர்ந்திருந்தார். நடந்ததை நான் வேறு யாரிடமும் சொல்லவில்லை. மேக் அப் அறை டீமில் மட்டும் சொன்னேன். படப்பிடிப்பில் 50 பேர் முன்னிலையில் இந்தச் சம்பவம் நடந்தது’ என்று பரபரப்பு புகார் கூறியிருந்தார். இதை நடிகர் அர்ஜுன் மறுத்திருந்தார்.

இந்நிலையில், நடிகரும் கன்னடத் தயாரிப்பாளருமான ராக்லைன் வெங்கடேஷ் அர்ஜுனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
இவர் கன்னட நடிகர்கள் சங்கப் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

ஸ்ருதி, புகார் சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. ஏதாவது நடந்தால் உடனடியாக அதற்கு எதிர்ப்பை தெரிவித்திருக்க வேண்டும். அந்தப் படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு அப்போது நடந்த போதே இவர் தெரிவித்திருக்கலாமே? நடிகர் அர்ஜுன் சிறந்த நடிகர்.

கதைக்கு தேவை என்றால் அதை செய்திருப்பார். அவ்வளவுதான் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ருதி ஹரிகரன் மீது கன்னட திரைப்பட வர்த்தக சபையில் அர்ஜூனின் மாமனாரும், நடிகருமான ராஜேஷ் புகார் கொடுத்துள்ளார்.

நடிகை சுருதி ஹரிகரன் கூறியுள்ள பாலியல் புகாரால், எனது மருமகனின்(அர்ஜூன்) புகழுக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது. இது எங்களுக்கு மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி கன்னட திரைப்பட வர்த்தகசபையில் புகார் கொடுத்துள்ளேன்.

இதுகுறித்து நடிகர்கள் சங்க தலைவர் அம்பரீசுடன், திரைப்பட வர்த்தகசபை நிர்வாகிகள் கலந்து ஆலோசனை நடத்தி உரிய முடிவு எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதில் தீர்வு கிடைக்காவிட்டால், நாங்கள் கோர்ட்டுக்கு செல்வோம்.

அர்ஜூனுக்கு கன்னட திரையுலகம் மட்டுமின்றி, 6 கோடி கன்னடர்களின் ஆதரவும் உள்ளது. அர்ஜூன் மீதான பாலியல் புகாருக்கு பின்னணியில் சதி இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அதுபற்றி என்னால் உறுதியாக சொல்ல முடியாது.