ராதாரவி எச்சரிக்கை
சின்மயி மிகவும் நல்ல பெண், எதற்காக இப்படி ஒரு metoo வில் சிக்கினார் என்று தெரியவில்லை, அவரை யாரோ தூண்டிவிட்டுள்ளார்கள் என்று நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
நான் மீடூவிக்கு ஆதரவு தருகிறேன். ஆனால் அது ஆண்களை மிரட்டுவது போன்று இருக்ககூடாது. ஒரு நடிகை தன்னை தவறாக தொட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.
இப்படி பிரச்சனை வருகிறதென்றால், அப்படிப்பட்ட நடிகைகளிடம் என்னை இங்கு தொடலாம்…அங்கு தொடக்கூடாது என்று முன்கூட்டியே ஒப்பந்தம் செய்து கையெழுத்து வாங்க வேண்டும்.
பிற பெண்கள் கூட இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம். ஏனெனில் அவர்கள் தொட்டு பேசுகிற தொழிலில் இல்லை. ஆனால் சினிமாவை பொறுத்தவரை தொட்டுதான் நடிக்க வேண்டும்.
இதனால், நம்மை நாமே அவமானப்படுத்திக்கொள்ள வேண்டாம். திரைத்துறையில் இருப்பவர்கள் தனியாக அழைத்தால் போகாதீர்கள். மீடூ என்பது முற்போக்கானது கிடையாது. இது சினிமாதுறையில் பிளவை ஏற்படுத்தும்.
உண்மை எது என்று தெரியாமல் குற்றம் சுமத்தாதீர்கள். ஆதாரம் இருந்தால் டுவிட் போடுங்கள். என்னை கூண்டில் ஏத்தினால், என்னை தவறு கூறும் பெண்மணியும் கூண்டில் ஏற வேண்டும். என்னை குறைசொல்பவர்கள் தைரியமாக என்னிடம் சொல்லவேண்டும். மீண்டும் நான் எச்சரிக்கிறேன், இந்த மீடூ மூலம் நம்மிடையே பிளவு வேண்டாம் என கூறியுள்ளார்.