அடித்து கொடுமைப்படுத்தி சம்பளம் தரவில்லை என்று பாலிவுட் நடிகை கிம் ஷர்மா மீது அவரது வீட்டில் வேலை பார்க்கும் பெண் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
துணி துவைத்தபோது கறுப்பு நிற உடை கலர் போய் அது வெள்ளை நிற டி-சர்ட் மீது பட்டுவிட்டது. இதை பார்த்து என் தவறை உணர்ந்த நான் கிம் ஷர்மாவிடம் உடனே தெரிவித்தேன். அவர் என்னை வீட்டை விட்டு வெளியே போகுமாறு பிடித்து தள்ளியதுடன், அசிங்கமாக திட்டினார்
அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், சம்பளம் கொடுக்கவில்லை என்றும் எஸ்தர் புகார் தெரிவித்துள்ளார். அவரின் புகாரின்பேரில் பொலிசார் கிம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள ஆடையை பாழாக்கிவிட்டார் எஸ்தர். அந்த கோபத்தில் அவரை வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னேன். ஆனால் அவரை நான் அடித்தது இல்லை. ஜூலை 7ம் திகதி சம்பளம் தருவதாக ஏற்கனவே அவரிடம் கூறியிருந்தேன் என்று கிம் விளக்கம் அளித்துள்ளார்.