என்னை விட்டு விடுங்க என கெஞ்சிய இளைஞர் : திருடன் என நினைத்து அடித்து கொன்ற மக்கள்.. அதிர்ச்சி சம்பவம்!!

701

அதிர்ச்சி சம்பவம்

தமிழகத்தில் திருடன் என நினைத்து இளைஞர் ஒருவரை பொதுமக்கள் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஈக்காட்டுர் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். அவர் வீட்டருகில் நள்ளிரவு 2 மணியளவில் இளைஞர் ஒருவர் நின்றதை பார்த்துள்ளார்.

இது குறித்து இளைஞரிடம் முத்துக்குமார் கேட்ட நிலையில் திருதிருவென முழித்த இளைஞர் அங்கிருந்து நைசாக கிளம்ப முயன்றார். இதனால் சந்தேகமடைந்த முத்துக்குமார் திருடன் திருடன் என கத்தி தூங்கி கொண்டிருந்த எல்லோரயும் வரவழைத்தார்.

இதையடுத்து அங்கு வந்த மக்கள் இளைஞரை பிடித்து கொண்டனர். அவர் போதையில் இருந்ததால் மக்களின் கேள்விக்கு அவரால் பதிலளிக்க முடியவில்லை. இதனால் இளைஞரை திருடன் என முடிவெடுத்த மக்கள் சரமாரியாக தாக்கினர். அடிக்காதீர்கள் என கூறியும் தொடர்ந்து தாக்கப்பட்டதால் இளைஞர் மயங்கினார்.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் அவரை மீட்ட பொலிசார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இது குறித்த விசாரணையில் இறந்தவர் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த தர்மராஜ் என்பது தெரியவந்தது. ஈகாட்டுர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை அவர் காதலித்தார்.

காதல் விவகாரம் பெண்ணின் வீட்டுக்கு தெரிந்த நிலையில் அடித்து உதைத்துள்ளனர். இது குறித்து அப்பெண் தர்மராஜுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து காதலியை பார்க்க தர்மராஜ் அங்கு வந்துள்ளார்.

வந்த இடத்தில் காதலி வீடு தெரியாமல் முழித்த நிலையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.